சுற்று சூழல் பராமரிப்பு


மரங்கள் மண்ணுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர் மூச்சு தருவதால் விளங்குகிறது. நாளைய சமுதாயம் உயிர்த்து இருப்பதற்கும், உயர்ந்து இருப்பதற்கும் மரம் ஒரு அங்கமாய் இருக்கிறது. 




இன்று நம் கண்ணெதிரே மரங்கள் வெட்டப்படுவதைப் பார்க்கிறோம். காடுகள் அழிவதைக் காண்கிறோம். காடுகள் இல்லையென்றால் நாடுகள் இல்லாதவையாகிவிடும். இயற்கை மனிதனுக்கு கொடுத்த உயர்ந்து பரிசு மரங்கள், செடிகள், கொடிகள் தாவர வகைகள்.

மனிதன் நாகரிகத்தில் தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டு மரங்களை மறந்ததால் தண்ணீர் இல்லாமல், வானம் மும்மாரி பெய்யாமல் அல்லல் படுகிறான். அரசு எவ்வளவு தான் முயன்றாலும் இதில் மாற்றங்கள் கொண்டு வர இயலாது. 

எனவே தனி மனிதனும், நல்ல அமைப்புகளும் இதில் ஈடுபட வேண்டியது அவசியம். அந்த வகையில் '’ GRAF"  பசுமை போர்த்த ஒரு சிறு முனைப்பாக ஈடுபடும் என்று கூறிக்கொண்டு  விடை படுகிறேன்